கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, அம் மாநில பாஜக, "ஆபரேஷன் லோட்டஸ்" என்ற புதிய வியூகத்தை வகுத்துள்ளது.

Update: 2019-01-14 16:40 GMT
ஆளும் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என தெரிவித்தார். இருந்தபோதிலும், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் திருப்பங்கள், அம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்