மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
மதுரையை பெருமைப் படுத்தும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, புத்தகம் அச்சிடும் பதிப்பகங்கள், அண்ணா நூலகம் குறித்து வினா எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து பதிப்பகங்களுக்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
* மேலும், அண்ணா நூலகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்கள் கல்வி பற்றி தெரிந்துகொள்ள யூ டியூப் மூலம் நிகழ்ச்சியும் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
* இதுபோல, மதுரையை பெருமைப்படுத்தும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கவும், ஓலைச்சுவடிகளை பாதுகாத்து புத்தகமாக வெளிக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.