இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
அறிவிக்கப்பட்ட திட்டம் எவ்வளவு வேகமாக செயல்பாட்டிற்கு வருகிறது என்பது தான் முக்கியம்....
முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....
காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
தஞ்சாவூரில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி...
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு....
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம்...
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையக ஐஜியாக நியமனம்....
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.....
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு......
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், ராகுல்காந்தியின் எம்.பி., பதவியை திரும்ப வழங்க வேண்டும்.....
மக்களவை செயலாளர் அதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என திமுக எம்.பி., வில்சன் பேட்டி...
வருவது எதுவானாலும் என்னுடைய கடமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி கருத்து...
இந்தியாவின் சிந்தனையை பாதுகாப்போம் என ட்விட்டரில் பதிவு...
ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு...
தீர்ப்பு நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என ட்விட்டரில் பதிவு....
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை...
நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு...
ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு...
அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும்....
அலுவல் மொழிக்கான 38வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு....