மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய குஜராத் வீராங்கனைகள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். அதிகபட்சமாக ஹேமலதா 31 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு குஜராத் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு வீராங்கனை சோஃபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.