சாகசத்தை தேடி வயநாட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்...மண்ணுக்குள் புதைந்த ரிசார்ட்டுகள்
சாகசத்தை தேடி வயநாட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பருவகாலத்தை கண்டு கொள்ளாமல் சுற்றுலா செல்லும் இளசுகளே !
இயற்கை பேரிடர்கள் ஏற்படும் பகுதிகளில் சிக்கி தவிப்பு
வயநாட்டிற்கு சுற்றுலா சென்றவர்களின் கதி என்ன ?
மண்ணுக்குள் புதைந்த ரிசார்ட்டுகள் - தவிக்கும் உயிர்கள்
நாளுக்கு நாள் வயநாட்டில் அதிகரித்த கட்டிடங்களின் எண்ணிக்கை
அண்மையில் சுற்றுலா வந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு
ரிசார்ட்டுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்
அட்வென்சர் சுற்றுலா என்ற பெயரில், இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ள நிலையில், வயநாட்டில் சுற்றுலா பயணிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
சூறாவளி போல போகிற இந்த இளமைய யாராச்சும் தடுக்க முடியுமா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப...சுற்றுலா, சாகசம் என அலைபாய்கிறது இளசுகளின் மனசு....
அப்படி அலைபாயும் பலரின் முதல் ஆப்ஷனாக இருந்தது நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாடு.
அதிலும் குறிப்பாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கேரளாவிற்கு அதிகளவில் மக்கள் வரக்கூடிய இடமாக திகழும் வயநாட்டில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சகல வசதிகளும் அதிகம்...
அதிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எக்கச்சக்கமான ரிசார்ட்டுகளை பார்க்க முடியும்...
இதற்காகவே, ஆண்டுதோறும் இப்பகுதிகளில் புதிய கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்துள்ளன..
இப்படி, மலைகளுக்கு நடுவில் மவுன்டைன் வியூவுடன் கூடிய ரிசார்ட்டுகள், நீச்சல் குளங்களுடன் கூடிய ரிசார்ட்டுகள், கிளாஸ் ரிசார்ட்டுகள் என பல ரிசார்ட்டுக
சாகசத்தை விரும்பும் இளசுகளுக்காக, ஸ்கை டைவிங்க், ஸ்கை சைக்கிளிங், ஜிப் லைன், அந்தரத்தில் கண்ணாடி மீது நடப்பது, போன்றவையும் இங்கு படு ஃபேமஸ்.
இவற்றையெல்லாம் மக்களுக்கு பரிட்சையப்படுத்த, சமூக வலைத்தள பிரபலங்களும் ப்ரமோஷன் செய்வது உண்டு...
இப்படிப்பட்ட ப்ரமோஷன்களை காணும் சிலர், இந்த சீசனில் சென்றால் பாதுகாப்பாக இருக்குமா ?, சுற்றுலா செல்ல எது உகந்த காலம் என எதையும் கவனிக்காமல், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து ஏதும் சிந்திக்காமல் சுற்றுலா செல்கின்றனர்.
இதில் பலர், பெற்றோரிடம் கூட தகவல் கொடுக்காமல், அட்வென்சர் பயணங்களுக்கு புறப்பட்டு விடுகின்றனர்.
அப்படி தான், தற்போதைய பேரிடரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்..
கடந்த 31ம் தேதி சூரல்மலை அருகே உள்ள வனராணி ரிசார்ட், இலா ரிசார்ட் ஆகிய இரு ரிசார்டுகளில் 19 பேர் சிக்கியிருந்தனர்.
அவர்களை ராணுவத்தினர், சகதிகளுக்கு இடையில் கயிறுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதே நிலை தான் வயநாடு அடுத்த முண்டகை, மேப்பாடி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ரிசார்ட்டுகளிலும்.
இந்நிலையில் வயநாட்டில் கடந்த ஒரு வாரமாக வந்த சுற்றுலா பயணிகள் யார் ? யார் ?, எந்த ரிசார்ட்டில் தங்கியுள்ளனர், மொத்தம் எத்தனை ரிசார்ட்டுகள் ?, என்ற கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஓவர் டூரிசம் தான் வயநாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் என கூறும் நிலையில், சுற்றுலா பயணிகளும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பருவகாலங்களை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என்பது பாடமாக மாறியுள்ளது.
தந்தி டிவி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் காலினுடன் செய்தியாளர் கார்த்திக்..
-