வயநாடு துயரம் தெரிந்ததும் காப்பாற்ற ஓடிய நல் உள்ளங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கேரள மாநிலம் மேப்பாடியில் தன்னார்வ மீட்புக்குழுவினரை போலீசார் அனுமதி மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. வயநாடு, முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிக்கு நுழைவுவாயிலாக மேப்பாடி பகுதி அமைந்துள்ளது. மேப்பாடி சாலை சந்திப்பில் தன்னார்வலர்களை போலீசார் அனுமதிக்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் ஏற்பட்டது.