மணிப்பூரில் புதிதாக வெடித் வன்முறையில் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களை கடந்த பிறகும் வன்முறையும் பதற்றமும் தனியாமல் நீடித்து வருகிறது. வன்முறைக்கு இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி உள்ள நிலையில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள குவாக்டா பகுதியில், நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் மெய்தி சமூகத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குக்கி சமூகத்தை சேர்ந்த பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.