உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியிலிருந்து சஹாரன்பூர் சென்ற பயணிகள் ரயில், சுத்தம் செய்யும் பணிக்காக சென்ற போது, 2 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், நிகழ்விடத்தில் எம்பி இம்ரான் மசூத் விபத்து குறித்து பார்வையிட்டார்.