உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் அடிபட்டு காவலர் உயிரிழந்தார்.
ஷாஜகான்பூரில் உள்ள இந்திரா நகர் ரயில்வே கிராசிங் அருகே, ரயில் வருவதை அறியாமல் அக்ஷய்வீரர் என்ற காவலர் உட்பட சிலர் கடக்க முயன்றனர். அப்போது ரயிலில் அடிபட்டு காவலர் உயிரிழந்தார். அவர் காதில் இயர்ஃபோன் அணிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.