தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம் பி சண்முகம் கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில் பேசியவர், 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதும் அவர்களுக்கான ஓய்வூதியம் என்றும் அதே ஆயிரம் ரூபாயாகவே தொடர்கிறது என்றார். ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான நிதி வளங்கள் இல்லை என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகம் தொடர்ந்து கூறுகிறது என்றவர் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமென என கோரிக்கை விடுத்தார்.