அமெரிக்கா செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Update: 2022-10-11 04:20 GMT

அமெரிக்கா செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் அமெரிக்காவிற்கு தனது அரசு முறை பயணத்தை தொடங்குகிறார். சர்வதேச நிதி ஆணையம்,

உலக வங்கி ஆண்டுக் கூட்டத்திலும், ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஜப்பான்,

தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் ஏலனுடனும், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து

பேசுகிறார். வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் மத்திய நிதியமைச்சர், "இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில்

இந்தியாவின் பங்கு" என்ற தலைப்பில் பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்