ஊட்டிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்...களைகட்டிய நீலகிரி

Update: 2024-05-20 11:15 GMT

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் நிறைவு நாளில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. 11 நாட்களாக நடந்து வரும் மலர்க் கண்காட்சியில், ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட டிஸ்னி வேர்ல்ட், 80 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட உதகை மலை ரயில், கிட்டார் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து ரசித்து வந்தனர். இறுதி நாளிலும் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை காண ஆர்வம் காட்டும் நிலையில், இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மலர்க்கண்காட்சியை கண்டு ரசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்