திருப்பதியில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டுள்ளது.திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு சிறுத்தைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால், சிறுத்தைகளிடமிருந்து பக்தர்களை பாதுகாக்க, தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இனிமேல் பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் முதல்கட்டமாக நடைபாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டது. பக்தர்களை ஒன்று சேர்த்து கூட்டமாக அழைத்து செல்லும் சமயத்திலோ அல்லது அவர்கள் தனியாக இருக்கும் சமயத்திலோ சிறுத்தை போன்ற வனவிலங்குகள் தாக்கினால், அவற்றை எதிர்க்க பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.