வாயை பிளக்க வைக்கும் பூக்களின் விலை அதிர்ச்சியில் வாடிப்போன பெண்கள்

Update: 2023-08-19 12:26 GMT

ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகத்தில் மலர்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது...

மல்லிகைப்பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் 700 ரூபாய்க்கும், முல்லை - சம்பங்கி 500 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 170 ரூபாய்க்கும், ஜாதிப்பூ 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

செவ்வந்திப்பூ விலை 300 ரூபாயாகவும், அரளிப்பூ, பிச்சிப்பூ விலை 200 ரூபாயாகவும், செண்டு மல்லி, கோழிக்கொண்டை விலை 80 ரூபாயாகவும், 1 தாமரைப்பூ விலை 10 ரூபாயாகவும் உள்ளது...

மேலும் ஓணம் பண்டிகை முடியும் வரை இந்த விலை ஏற்றமானது மேலும் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்