பேருந்தில் கட்டு கட்டாக பணத்தை கைப்பற்றிய போலீசார்

Update: 2023-08-02 05:27 GMT

பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடியே 13 லட்சம் ரூபாய் பணத்தை கண்ணூரில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரிலிருந்து கேரள மாநிலம், தலச்சேரிக்கு வந்த தனியார் பேருந்தை கண்ணூர் கூட்டுப்புழா சோதனைச் சாவடியில் கலால் துறையினர் சோதனை செய்தனர். பேருந்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணு, செந்தில், முத்து, பழனி, சுடலைமுத்து ஆகியோர், 1 கோடியே 13 லட்சம் ரூபாயை தங்கள் உடலில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்தனர். அந்த பணத்தை மலப்புரம் மற்றும் கோழிக்கோடுக்கு கொண்டு செல்வதாக 5 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஓணம் பண்டிகை வருவதால் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்