விளையாடும்போதே சிறுமி திடீர் மாயம்...2 நாளாக காணாமல் கதறும் பெற்றோர் - உறவினர்கள் செய்த காரியம்

Update: 2024-03-04 08:28 GMT

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமியை 2 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை எனக்கூறி காவல்துறையை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த நாராயணன் மைதிலி தம்பதியின் 2வது மகள் ஆர்த்தி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார்... போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை கண்டுபிடிக்கப் படாததால் அப்பகுதி மக்கள், உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியத்தை அடுத்து போராட்டம் கைவிப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்