சபரிமலையில் அலைமோதும் கூட்டம்..! பக்தர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி | Ayyappan Temple
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 31-ம் தேதி திறக்கப்பட்டு, மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதனால் அரவணை பிரசாத டின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு டின் ஆறு ரூபாய் 47 பைசா என்ற கட்டணத்தில், நாள்தோறும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டின் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், 65 ஆயிரம் டின்கள் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது. டின்கள் தட்டுப்பாடு காரணமாக தினசரி உற்பத்தி, மூன்று லட்சத்திலிருந்து இரண்டு லட்சத்து 30 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பக்தருக்கு, 10 டின் அரவணை என்பது ஐந்து டின்னாக குறைக்கப்பட்டது. இந்த பிரச்னையை சமாளிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு புதிய டெண்டர் கோரியுள்ளது