புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில், வி.ஏ.ஓ மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரிக்கு சென்ற போது, அவரது இருசக்கர வாகனம் திருடு போனது. இது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திண்டிவனம் பகுதியை சேர்ந்த சையத் காலிம், அர்ஜூனன் மற்றும் கார்த்தி ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார்த்தி ஏற்கனவே விழுப்புரம் சிறையில் உள்ளார். சையத் காலிமை கைது செய்து விசாரித்ததில், அவர் திண்டிவனம் கிராம நிர்வாக அதிகாரியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.