நாடு முழுவதும் மெகா மோசடி.. 3,500 விக்டிம்கள்.. ரூ.100 கோடி.. போலீசை மிரளவிட்ட 4 பட்டதாரிகள்

Update: 2024-08-04 11:35 GMT

புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை என்ற இணையதளத்தை பார்த்து விண்ணப்பித்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர், ரமேசுக்கு கனடாவில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான விசா உள்ளிட்ட்ட செலவு என 3 தவணைகளாக 17 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி வேலை வாங்கி தராததால் இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரமேஷ் பணம் அனுப்பிய வங்கி எண், செல்போன் எண்ணை வைத்து பெங்களூரில் தங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுபம் ஷர்மா, தீபக் குமார், ராஜ் கவுண்ட் மற்றும் நீரஜ் குர்ஜார் ஆகிய நான்கு பட்டதாரி இளைஞர்கள் என தெரியவந்தது. இவர்கள் போலி விளம்பரம் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 பேரை ஏமாற்றி ரூபாய் 100 கோடி வரை சுருட்டி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் 41 லட்சம் பணம், 2 பாஸ்போர்ட், 21 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்