மீண்டும் ஒருமுறை நீட் வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள் எழுந்திருப்பதாகவும், நாட்டில் உள்ள 24 கோடி இளைஞர்கள் எதிர்காலம் மீண்டும் குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பதாக தமது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாகவே நீடித்து வரும் இத்தகைய போக்குகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி, இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இளைஞர்களை சமாதானப்படுத்த வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அண்மையில் புதிய சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, அந்த சட்டம் எங்கே போனது, அதை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வினவியுள்ளார்.