ஜார்கண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-02-18 13:32 GMT

ஜார்கண்ட் புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்க முதலமைச்சர் சம்பய் சோரன் மறுத்துவிட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றபின் டெல்லி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த சம்பய் சோரன், அது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம் என்றும், அதுகுறித்து தான் கருத்து கூற எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். ஜே.எம்.எம்.-காங்கிரஸ் இடையே மோதல் இல்லை என்றும் சம்பய் சோரன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்