நாளை விண்ணில் பிறக்கப்போகும் இன்சாட் 3DS - காத்திருக்கும் இந்தியா

Update: 2024-02-16 02:16 GMT

பேரிடரின் போது உதவுவதற்காக இன்சாட் சீரிஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பி வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் மாலை 5.35 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி F 14 ராக்கெட் மூலம், இன்சாட்-3 டி எஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. சுமார் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோளில், வானிலை மாறுபாடுகளை துல்லியமாக கணிக்கும் 25 வகையான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்