உயிர்களை இழுத்து சென்ற கோதாவரி..உச்சகட்ட வேதனையில் கதறிய மக்கள் - மறுகணம் கரைக்கு திரும்பிய காட்சிகள்
தெலங்கானாவில், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமை மாடுகளை விவசாயிகள் மீட்டனர். தெலங்கானா மாநிலத்தில் தொடர் கனமழையால் கோதாவரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியில் குளிக்கச் சென்ற சில எருமை மாடுகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு,
மறு கரையை அடைந்தன. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை படகு மூலம் கொண்டு சென்ற ஆந்திர அமைச்சர் நிம்மல ராமா நாயுடுவிடம், விவசாயிகள் இதுகுறித்து முறையிட்டனர். இதையடுத்து, படகு மூலம் எருமை மாடுகள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டன.