காட்டுக்குள் கன் ஃபயர்.. பதிலடி கொடுத்த படை.. இறந்தவர்கள் குறித்து தெரிந்ததும் அதிர்ந்த போலீஸ்

Update: 2024-09-06 10:51 GMT

தெலங்கானாவில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பெண் உட்பட 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம், மோத்தே கிராம வனப்பகுதியில், மாவோயிஸ்ட் இயக்க தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ​இதில் பெண் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீசார், சடலங்களை மீட்டு, உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்