"தமிழகத்திற்குரிய தண்ணீர் வேண்டும்" - கர்நாடக அரசை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி, தலைமை தபால்நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் சிபிஐ கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்களான உலகநாதன், பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.