செய்தியாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு...பின்னணியில் சீனா? - பரபரப்பில் தலைநகரம்
செய்தியாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு...பின்னணியில் சீனா? - பரபரப்பில் தலைநகரம்
நியூஸ் கிளிக் செய்தி இணையதள அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சீனாவிடம் இருந்து நிதியுதவி பெற்று அந்நாட்டின் கொள்கைகளை இந்தியாவில் பரப்பி வருவதாக எழுந்த புகாரில், நியூஸ் க்ளிக் செய்தி இணையதளத்தின் அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில், டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அந்நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. இணையதளத்தில் பணியாற்றும் சில செய்தியாளர்களின் அலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூஸ் கிளிக் நிறுவனம் மீது தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீன அரசுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்யும் விதமாக நியூஸ் கிளிக் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க மில்லியனர் நெவில் ராய் சிங்கம் என்பவர் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது.