வலுவடைந்து வரும் I.N.D.I.A கூட்டணி...மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு கருத்து | INDIA
இந்தியா கூட்டணியின் ஆலோசனையில் தனது கருத்துகளை முன்வைத்த மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியின் வலிமை மத்திய அரசை பதற்றமடைய வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்தியா கூட்டணி வலுவடைவதால், மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலால் கைது, சோதனைகள் அதிகரிக்கும் எனக்கூறினார். அரசு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறிய அவர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் சோதனை நடைபெற்றதை குறிப்பிட்டார். சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பாஜகவின் எதேச்சதிகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 140 கோடி இந்தியர்களும், துயரிலிருந்து அவர்களை விடுவிக்க நம்மை நம்பிக்கையுடன் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். மாநில அரசுகளுக்கு வரி வருவாய் மறுக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.