இலங்கை தேர்தல் களத்தில் அடிபடும் இந்தியா பெயர் | Srilanka | India

Update: 2024-09-02 05:45 GMT

திரிகோணமலை துறைமுகம் இந்திய அரசின் ஆதரவுடன் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அதிபர் ரணில்

விக்ரமசங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் இம்மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திரிகோணமலையில் நடைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க , பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை திரிகோணமலைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இலங்கை வரும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்காக நிலாவெளியில் இருந்து திரிகோணமலை வரையிலும் வெருகல் ஆறு முதல் அறுகம்பே வரையிலும் சுற்றுலா மையங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்தியாவுடன் இணைந்து ஆசியாவிலேயே மிகப் பெரிய திரிகோணமலை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் இலங்கை அதிபர் ரணில்

விக்ரமசங்க தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்