சனாதான தர்மம்.. "கோவிந்தா.. கோவிந்தா" - திருப்பதி தேவஸ்தான அறிவிப்பால் பரபரப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம், அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய அரங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, இளைஞர்கள் மத்தியில் சனாதன தர்மம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு கோடி முறை கோவிந்த நாமம் எழுதி எடுத்துவரும் நிலையில், அந்த நபரின் குடும்பத்திற்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும் எனவும், பத்து லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி எடுத்துவந்தால், அந்த பக்தருக்கு மட்டும் விஐபி தரிசனம் அளிக்கப்படும் என்றார்.