வெறும் ரூ.45,000 செலவில் ரோல்ஸ் ராய்ஸ் - பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு | rolls royce
கேரளாவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பழைய மாருதி 800 காரை ரோல்ஸ் ராய்ஸ் காராக மாற்றி அசத்தியுள்ளார். இதற்காக வெறும் 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானதாக கூறப்படுகிறது.
திருச்சூர் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஹஃதீப் பழைய வாகனங்களை புதிதாக மாற்றுவதில் ஆர்வம் உடையவர். இவரது ஆர்வத்தை பார்த்த உறவினர் ஒருவர் தமது மாருதி 800 காரை தந்து ரோல்ஸ் ராய்ஸ் காராக மாற்றித்தரும் படி கூறியுள்ளார். அதன் படி, தனி ஆளாக மாணவன் ஹதீஃப் தயாரித்த ரோல்ஸ் ராய்ஸ் கார், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.