வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், ராமர் கோயில் ஏழைகளின் வயிற்றை நிரப்பாது, ராமர் கோவில் இல்லையென்றால் யாரும் மனமுடைய மாட்டார்கள் என கர்நாடக அமைச்சர் சரணபசப்பா கெளடா தெரிவித்தார். மேலும், 75 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு தேவையான பள்ளிகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அமைச்சருடைய இந்த கருத்து தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.