புதுச்சேரியில் செல்ல பிராணியான நாய்க்கு, நலங்கு வைத்து மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடியுள்ளனர். வாழைக்குளம் பகுதியில் வசிக்கும் அருண்-சத்யா தம்பதியினர், சசிகலா என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நாய் வயதுக்கு வந்துவிட்டது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாயிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, தாய் மாமா முறைப்படி, சத்யாவின் சகோதரர் சீர்வரிசை கொண்டு வர, நாய் சசிகலாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்துள்ளது.