பின்னால் வந்து பாலியல் சீண்டல்..ஒரே எறியில் சுருண்ட 50 வயது பெண் - காம பிசாசுக்கு மக்கள் தந்த தண்டனை
புதுச்சேரியில் 50 வயது பெண்ணிடம், மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை- சின்னப்பேட் பகுதியை சேர்ந்த மீனா என்பவர், தனது வீட்டின் அருகிலுள்ள கோழிக்கறி கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பின்பக்கமாக மதுபோதையில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், கல்லை எடுத்து தாக்கியதில் மீனா மயக்கமடைந்தார். பின்னர் அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கலியமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, போலீஸ் வாகனத்தை சூழ்ந்துகொண்டு கலியமூர்த்தியை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.