புதுச்சேரி வைத்தியகுப்பம் கடற் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, வைத்திகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அஜந்தா சிக்னல் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ
இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.