அதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 17 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள லீனியர் ஆக்சிலேட்டர் என்ற புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அங்கிருந்தபடி, வில்லியனூரில் 10 கோடி ரூபாய் செலவில், 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் காணொலி மூலம் அவர் திறந்து வைத்தார். விழாவில் பேசிய திரௌபதி முர்மு, பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுச்சேரி விளங்குகிறது என்றும், சர்வதேச அளவில் சமூக முன்னேற்றத்தில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.