ரெய்டில் சிக்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்திய நிர்வாகிகள்... மெகா சோதனையில் நடந்தது என்ன?
ரெய்டில் சிக்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்திய நிர்வாகிகள்... மெகா சோதனையில் நடந்தது என்ன?
கேரள மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு அன்று நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
இதை அடுத்து, பிஎஃப்ஐ நிர்வாகிகளுக்கு சொந்தமான மட்டன்னூர், சக்கரக்கல், இரிட்டி, உளியில் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில்
போலீசார் சோதனை மேற்கொண்டனர். அமைப்புக்கு நிதி ஆதாரங்கள் வருவது தொடர்பான விஷயங்களை போலீசார் ஆராய்ந்ததாக கூறப்படுகிறது. சோதனை
நடத்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து லேப்டாப், சி.பி.யு, மொபைல்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை அடங்கிய கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பாக
308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.