சூப்பர் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றும் நோக்கத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 130 கோடி ரூபாய் மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசியவர் அறிவியலின் முக்கியத்துவம் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியில் மட்டுமல்ல, கடைசி நபரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும் உள்ளது என்றார். சூப்பர் கம்ப்யூட்டர்கள் புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டுள்ளன.