திருப்பதி மலையேறும் படிக்கட்டு பாதையில் இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் அப்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் கரடி நடமாடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை வெளியிட்ட தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அதிகாரிகள், கரடி நடமாடும் பகுதியில் பாதுகாப்பு மட்டுமின்றி கண்காணிப்பையும் அதிகப்படுத்தியுள்ளனர்.