நீட் வினாத்தாள் கசிவுக்கு யார் காரணம்? - நாடே கேட்ட கேள்விக்கு விடை... சிக்கும் பல தலைகள்?

Update: 2024-06-29 02:47 GMT

நீட் வினாத்தாள் கசிவுக்கு யார் காரணம்? - நாடே கேட்ட கேள்விக்கு விடை... சிக்கும் பல தலைகள்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்க்கண்டைச் சேர்ந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது.நீட் தேர்வு முறைகேடு புகார்களை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹாஸாரிபாக் மாவட்டத்தின் நீட் தேர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவரும், தனியார் பள்ளியின் முதல்வருமான ஏஸானுல் ஹக், அதே பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரு நாள்களாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக இருவரையும் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிபிஐ விசாரணையில் இன்னும் பலர் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்