தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது.! திரௌபதி முர்மு வழங்கினார்

Update: 2023-09-06 04:31 GMT

டெல்லியில் நடைபெற்ற விழாவில் 75 பேருக்கு அவர் விருதுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் சான்றிதழ், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து உயர்கல்வித் துறையில், கோவை பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பிருந்தா, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பில், திண்டுக்கல் குள்ளம்பட்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உதவி பயிற்சி அலுவலராகப் பணியாற்றும் எஸ்.சித்திர குமார் ஆகியோர் விருது பெற்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் மற்றும் தென்காசி ஆசிரியர் மாலதியும் விருது பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்