கேரளா உலுக்கும் பறவைக்காய்ச்சல்...கோழிப்பண்ணைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய அறிவிப்பு

Update: 2024-04-23 01:58 GMT

கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப்பண்னைகளைக் கண்காணிக்க கால்நடை மருத்துவர்கள் தலைமையில் 47 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு எதுவம் பதிவாகவில்லை என்றும் கூறினார். கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரித்துத்துறை அலுவலரிகளிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்த ஆட்சியர், கொத்து கொத்தாக கோழிகள் உயிரிழந்தால் உடனடியாக தகவல்களை தெரிவிக்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்