மகாராஷ்டிராவில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் காலை முதல் பிரபலங்கள் பலரும் வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.சென்ற ஆண்டு இந்திய குடியுரிமை பெற்ற பிறகு முதல் முறையாக நடிகர் அக்சய்குமார்
வாக்களித்தார். திரை பிரபலங்களான நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், நடிகர்கள் அனில் கபூர், அனுபம் கெர், சுனில் ஷெட்டி, ரன்தீப் ஹூடா, பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகையும் பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி , அவரது மகள் ஈஷா தியோல் ஆகியோர் வாக்களித்தனர். மேலும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். இதேபோல் கிரிக்கெட் வீரர் ரஹானே தனது மனைவியுடன் வாக்களித்தார்.