எதிர்பாரா நேரம் மும்பையில் வீசிய புழுதி புயல்.. பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.. ஆபத்தான நிலையில் 67 பேர்
மகராஷ்டிரா மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் கடுமையான புழுதிப்புயல் வீசி வந்தது. இதன் காரணமாக மும்பையின் காட்கோபர் பகுதியில், ராட்சத இரும்பு விளம்பர பலகை சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்ட நிலையில், இதுவரை 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.