"அனைத்து சாதனங்களிலும் இந்தியா தயாரிப்பு சிப் இருக்க வேண்டும்" - பிரதமர் மோடி | Modi
உலகில் இருக்கும் அனைத்து சாதனங்களிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் இருக்க வேண்டும் என்பதே எங்களது கனவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 3 நாட்கள் நடைபெறும் செமிகான் இந்தியா-2024 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர் தொழில்துறைக்கு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா வழங்குவதாக தெரிவித்தார். செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர், இதில் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களும் வரவிருப்பதாக குறிப்பிட்டார்.