காவேரி விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 21 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்துக்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்குத் தொடர உள்ளதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.