"தில் இருந்தால் இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்" - காட்டமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து ஏற்கனவே குறுகியகால விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், அதுகுறித்த நோட்டீஸ்களை ஏற்க மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் விவகாரம் பற்றி அம்மாநில சட்டசபையில் பேசலாம் என்றும், ராஜஸ்தான், சத்தீஸ்கர் விவகாரங்களை பேசுவதற்கான களம் நாடாளுமன்றம் அல்ல எனவும் குறிப்பிட்டார். பா.ஜ.கவுக்கு பலம் இருந்தால் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு சென்று பதில் அளிக்கட்டும் என்றும் கார்கே காட்டமாக தெரிவித்தார்.