கருட பஞ்சமியை முன்னிட்டு, திருப்பதி திருமலையில் கருட வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர், மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட பூஜைகளுக்கு பிறகு, மாட வீதிகளில் மலையப்ப சுவாமி உலா வந்தார். இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.