நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம்...பிரமாண்டத்தை திறந்த பிரதமர் மோடி - எந்த இடத்தில் தெரியுமா?

Update: 2024-02-25 07:30 GMT

குஜராத் மாநிலத்தில், 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஒகா பெருநிலப் பகுதியையும், பேட் (Beyt) துவாரகா தீவையும் இணைக்கும் வகையில், சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும். சுதர்சன் சேதுவில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையும் உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்தப் பாலம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, துவாரகா மற்றும் பேட் துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்