கொல்கத்தாவில் இருந்து வந்த 4 பேர் செய்த சம்பவம் - திருப்பூரில் பரபரப்பு
நூல் தருவதாகக் கூறி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்த 4 பேரை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூரைச் சேர்ந்த பாலாஜி பிரியதர்ஷன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர், கொல்கத்தாவை சேர்ந்த சிலருடன் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பாலாஜி பிரியதர்ஷன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொல்கத்தா சென்று நூல் பெறுவதற்கு, 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தபோது, அந்த கும்பல் நூலை கொடுக்காமல் அங்கிருந்து ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட அஜய் தும், ஆகாஷ் தாஸ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.