கேரளாவில் நொடியில் சிதறி பலியான தமிழர்கள்... நினைத்து பார்க்க முடியா பயங்கரம்
கேரளாவில் நொடியில் சிதறி பலியான தமிழர்கள்... நினைத்து பார்க்க முடியா பயங்கரம்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சோரனூர் ரயில் தண்டவாளத்தில் தமிழக தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவத்தில் அது தொழிலாளர்களின் தவறு தான் என ரயில்வே நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சோரனூர் ரயில் தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த ராணி, அவரது சகோதரி வள்ளி, கணவர் லட்சுமணன், மற்றும் மற்றொரு தொழிலாளி லட்சுமணன் ஆகிய 4 பேர் மீதும் அவ்வழியே சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது... இவ்விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில் எந்த தவறும் இல்லை எனவும், தண்டவாளம் வழியாக நடந்து சென்றது தொழிலாளிகளின் தவறு எனவும் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது... மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு அவர்களுக்கான ஒப்பந்ததாரரின் பொறுப்பு எனவும், அவர் அதை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது...